உன் அம்மா-க்கு இருக்குறது தான் எனக்கும் இருக்குது: பனிமலர் ஆவேச பேச்சு
Send us your feedback to audioarticles@vaarta.com
உன் அம்மாகிட்டயும், உன் அக்காவிடமும், உன்னுடைய குடும்ப பெண்களிடம் இருப்பதுதான் அனைத்து பெண்களிடம் இருக்கிறது என ஆவேசமாக பனிமலர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
செய்திவாசிப்பாளர், சமூக வலைதள பயனாளியுமான பனிமலர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தன்னிடம் தரக்குறைவாக சமூகவலைத்தளங்களில் வீடியோவில் பேசுபவர்களுக்கு அவர் பதிலடியாக கூறியதாவது: ‘சமூக வலைத்தளங்களில் நேரடியாக வீடியோவில் பேச வரும் சிலர் ஆபாசமாக உன்னை பார்க்கவேண்டும் என்று கூறும் ஆண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். உன் அம்மாவிடமும் அப்பாவிடமும் உன் வீட்டுப் பெண்களிடமும் இருப்பதுதான் என்று அனைத்து பெண்களிடமும் உள்ளது. நீ மற்ற பெண்களை அவமதிப்பதாக பேசுவதுபோல் உன்னுடைய வீட்டு பெண்களிடம் பேசுவார்கள் என்பதை மறந்துவிடாதே.
குறைந்தபட்ச நாகரிகத்தோடு பொதுவெளியில் பேசுவதற்கு பழகுங்கள், நான் கஷ்டப்பட்டு செய்தி வாசித்து பணம் சம்பாதிக்கின்றேன். அதேபோல் சமூக வலைதளங்களிலும் பேசி வருகிறேன். ஆனால் நீ எந்த வேலையும் பார்க்காமல் பெண்களை அவமதிப்பது ஒன்றை மட்டுமே வேலையாக பார்த்து வரும் உன்னை எல்லாம் நான் ஒரு மனிதனாக மதிக்க வில்லை.
தற்போது ஆட்சி மாறி விட்டது. காவல் துறையில் ஒரு புகார் அளித்தால் அடுத்த சில மணி நேரங்களில் உன்னை கைது செய்ய முடியும். ஆனால் உன்னை எல்லாம் ஒரு மனிதனாகவே நினைக்கவில்லை என்பதாலும் ஒரு புழு பூச்சி போல நினைப்பதாலும் தான் நான் புகார் அளிக்கவில்லை. ஆனால் எல்லை மீறினால் புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார். பனிமலர் பேசிய முழு வீடியோ இதோ:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com