சிவகார்த்திகேயன் படவிழாவில் மூன்று பிரபலங்கள்

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு திரைப்படமான 'கனா' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த விழாவுக்கு மூன்று திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

சிவகார்த்திகேயனை முதல்முறையாக 'மெரீனா' படத்தின் மூலம் ஹீரோவாக்கிய இயக்குனர் பாண்டிராஜ், சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து கொண்டிருக்கும் அனிருத் மற்றும் டி.இமான் ஆகிய மூவரும் 'கனா' இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் பாடகருமான அருண்காமராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்திலும், நடிகர் தர்ஷன் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இந்த படம், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

More News

அறியாமையா? அகந்தையா? நடிகர் சங்கத்திற்கு எஸ்.வி.சேகர் கேள்வி

நடிகர் சங்கத்தின்  65வது ஆண்டு பொதுகுழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தனர்.

சிரிச்சு சிரிச்சு என்ஜாய் பண்ணினேன். நெல்சனுக்கு வந்த சர்ப்ரைஸ் அழைப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள்

என்னா அடி....மும்தாஜின் மேல் இவ்வளவு கோபமா ஐஸ்வர்யாவுக்கு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்படும் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் வீடியோவில் நாமினேஷன் படலம் குறித்த காட்சிகள் இருந்தன

கோலமாவு கோகிலா' வசூலில் தெரிந்த நயன்தாராவின் மாஸ்

முதல்முதலாக ஹீரோவே இல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு திரைப்படம் மாஸ் வசூல் பெற்றுள்ளது என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' திரைப்படம் தான்

சைக்கிள் வாங்கும் பணத்தை நிவாரண நிதியாக கொடுத்த சிறுமிக்கு கிடைத்த வெகுமதி

கேரள மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து நிவாரண நிதி குவிந்து வருகிறது