சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்': சூப்பர் அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்

  • IndiaGlitz, [Tuesday,August 31 2021]

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் 51 நாட்கள் நீண்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இயக்குனர் பாண்டிராஜ் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்

வெயில், மழை எங்களுடைய வேலையை நிறுத்தவில்லை என்றும், என்ன ஒரு கடுமையான உழைப்பாளி அணியுடன் நான் பணிபுரிந்து இருக்கின்றேன் என்றும், நம்பமுடியாத உழைப்பை அனைவரும் கொட்டி கொடுத்தார்கள் என்றும், குறிப்பாக சூர்யா, சன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பாண்டியன் உட்பட அனைவருக்கும் எனது நன்றி என்றும் நடிகர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார்

’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார் என்பதும், மேலும் இந்த படத்தில் சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், புகழ், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது