'கதகளி' கதை யாருடையது? பாண்டியராஜ் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,December 31 2015]
பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க -2' திரைப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இயக்கிய அடுத்த படமான 'கதகளி' வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பாண்டியராஜ், 'சுசீந்திரன் உதவியுடன் நான் விஷாலை சந்தித்து இரண்டு கதையை கூறினேன். ஒன்று குடும்பபாங்கான ஆக்க்ஷன் கதை. மற்றொன்று 'கதகளி' கதை. இரண்டையும் கேட்டுவிட்டு அவர் 'கதகளி' கதையை தேர்வு செய்தார். இந்த கதை நாவலை போல மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது என்றும் நிச்சயம் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று விஷால் என்னிடம் கூறினார்.
அதுமட்டுமின்றி இந்த கதை என்னுடைய நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம். உண்மைக்கதை என்பதால் இந்த படத்தை மக்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.. நாயகி கேத்ரீன் தெரசா மீனு குட்டி என்னும் அழகான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக எனக்கு சிறந்த டீம் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது' என்று கூறினார்.
மேலும் இந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஒரு குத்துப்பாட்டை வைத்திருந்ததாகவும், ஆனால் கதையின் வேகத்தை அந்த பாடல் குறைக்கும் என்பதால் அந்த பாடலை எடுத்துவிட்டதாகவும், இரண்டாவது பாதியில் பாடலே இல்லாமல் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார்.