close
Choose your channels

ஆலுமா டோலுமா.. செம ஆட்டம் போட்ட பாண்டியராஜன் குடும்பத்தினர்.. வைரல் வீடியோ.!

Wednesday, April 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் வெளியூர் சுற்றுப்பயணம் சென்று இருந்த நிலையில் அங்கு அவர் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வந்தவர் பாண்டியராஜன் என்பதும் ’ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமான அவர் அதன் பிறகு பல திரைப்படங்களை இயக்கினார் என்பதும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான ’பார்ட்னர்’ என்ற திரைப்படத்தில் கூட நடித்த அவர் சமீபத்தில் வெளியான ‘இப்படிக்கு காதல்’ என்ற படத்தில் கூட நடித்திருந்தார்.

இந்த நிலையில் பாண்டியராஜனுக்கு, பிரித்விராஜன், பல்லவராஜன், பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் அவர் தனது மனைவி மகன்கள் மற்றும் குடும்பத்துடன் வெளியூர் சுற்றுப்பயணம் சென்று உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் அவரது மகன் பிரித்திவிராஜன் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக ஒரு சிறு குழந்தையுடன் பாண்டியராஜன் குடும்பத்தினர் ஆலுமா டோலுமா பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment