'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதா வெளியிட்ட ஹோம் டூர் வீடியோவில் வேட்டை துப்பாக்கி.. லைசென்ஸ் இருக்குதா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த சுஜிதா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் வேட்டை துப்பாக்கி இருந்ததை எடுத்து அந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகளை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை சுஜிதா. இவர் சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்த ஹோம் டூர் வீடியோவில் வேட்டை துப்பாக்கி இருந்ததை அடுத்து அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருக்கிறதா என்பது போன்ற பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள சுஜிதா ’அது தனது நண்பருடைய வீடு என்றும் கோவை அருகே மருதமலை அடிவாரத்தில் தனது நண்பருடைய வீடு உள்ளது என்றும் நீலகிரி சுற்றுலா சென்ற போது அவருடைய வீட்டிற்கு போனபோது அவருடைய வீட்டை பார்த்ததும் எனக்கு ஹோம் டூர் வீடியோ எடுக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது,.
டு மரங்கள் இயற்கை சூழ இருந்த அந்த வீட்டை அவருடைய சம்மதத்துடன் நான் வீடியோ எடுத்து எனது சேனலில் ஹோம் டூர் வீடியோவாக வெளியிட்டேன். அந்த வீடியோவில் தான் ஏர் ரைபிள் என்ற வகை துப்பாக்கி இருந்ததை பார்த்து பலரும் பலவிதமான கமெண்ட் செய்தனர்.
வனப்பகுதியில் அவர்கள் வசிப்பதால் பாதுகாப்புக்கு வைத்திருக்கும் அந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் கூட தேவை இல்லை. ஆனால் அதை சர்ச்சைக்குரிய வகையில் பலரும் பேசி உள்ளனர். இந்த தகவல் பரபரப்பானதை அடுத்து எனது நண்பரே எனக்கு போன் செய்து ’எப்படி இது மாதிரி எல்லாம் யோசிக்கிறாங்க என்று தெரியவில்லை’ என்று கூறி சிரித்தார்.
சில செய்தி சேனல்கள் கூட என்னிடம் விளக்கம் கேட்காமல் இந்த செய்தியை ஒளிபரப்பி இருக்கிறார்கள், ஆனால் அதே நேரத்தில் வனத்துறையில் இருந்து எங்களிடம் யாரும் விசாரணை செய்யவில்லை, மொத்தத்தில் இது தேவையில்லாத ஒரு ஆணி தான்’ என்று விளக்கம் அளித்துள்ளார். அவருடைய இந்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout