'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லை நடிகைக்கு கிடைத்த புதிய வாய்ப்பு.. ஜீ தமிழ் தொடரில் இணைகிறார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பான’ பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் முல்லை என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஜீ தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பதும் ஐந்து ஆண்டுகள் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. தற்போது தந்தை மகன்களின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த சீரியலும் முதல் சீசன் போலவே வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தில் முல்லை கேரக்டரில் நடித்த நடிகை லாவண்யாவுக்கு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஸ்வாதி ஷர்மா மற்றும் ஆனந்த் செல்வன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் ’நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஜீ தமிழில் தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த தொடரில் தான் நடிகை லாவண்யா இணைந்துள்ளார். ஏற்கனவே இவர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மட்டுமின்றி ’சிப்பிக்குள் முத்து’ உட்பட சில சீரியல்களில் நடித்துள்ள நிலையில் ’நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் இவர் இணைந்துள்ளதை அடுத்து இந்த சீரியலுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com