பீரியட்ஸ் இருந்தாலும் கோவிலுக்கு போவேன்.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகையின் போல்டான பேட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பீரியட் நேரமாக இருந்தால் கூட கோவிலுக்கு செல்வேன் என்று ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் போல்டாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கடந்த 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான நிலையில் தற்போது இந்த சீரியலின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் முதல் சீசனில் பாண்டியன் குடும்பத்தின் கடைக்குட்டி ஆன சரவணன் விக்ரம் ஜோடியாக நடித்தவர் விஜே தீபிகா. இவர் சில எபிசோடுகள் மட்டுமே நடித்த நிலையில் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார் என்பதும் அதன் பிறகு மீண்டும் இந்த சீரியலில் அதே கேரக்டரில் சில மாதங்கள் கழித்து இணைந்தார் என்பதும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த விஜே தீபிகா ’பீரியட்ஸ் நேரமாக இருந்தால் கூட நான் கோவிலுக்கு செல்வேன், சாமி கும்பிடுவேன், பூஜை அறைக்கும் செல்வேன், என்னை பொருத்தவரை என்னுடைய கடவுள் எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும் என்னை ஏற்றுக் கொள்வார், என்னை எப்போதும் அவர் ஒதுக்க மாட்டார், கடவுளே ஒதுக்காத போது என்னை ஒதுக்குவதற்கு நீங்கள் யார்’ என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் நார்மலான நாள் போலவே நான் பீரியட்ஸ் நாளிலும் பூஜை அறைக்கு செல்வேன், விபூதி குங்குமம் வைத்து கொள்வேன், நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று என்னிடம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை’ என்று போல்டாக கூறியுள்ளார்.
’அது மட்டும் இன்றி அனைத்து நாட்களிலும் நான்வெஜ் சாப்பிடுவேன், நான்வெஜ் சாப்பிட்டு விட்டு கூட நான் கோவிலுக்கு செல்வேன் என்றும் கூறியுள்ளார். விஜே தீபிகாவின் இந்த போல்டான பேட்டிக்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com