'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,April 19 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். குழந்தை முதல் நடித்து வரும் இவர் பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுஜிதாவின் குடும்ப புகைப்படம் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுஜிதாவின் கணவர் தனுஷ் ஒரு போட்டோகிராபராக உள்ளார் என்பதும் இவர் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சுஜிதா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் சேர்ந்தும் சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ்-சுஜிதா தம்பதிகளுக்கு தன்வீர் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு ஆச்சரியமாக கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு குழந்தை இல்லாத கேரக்டர் என்றாலும் அவருக்கு உண்மையில் இவ்வளவு பெரிய மகன் இருக்கிறார் என்பதை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.


 

More News

1000 வருடங்களுக்கு முந்தைய ராணி கேரக்டரில் சன்னிலியோன்!

1000 வருடங்களுக்கு முந்தைய ராணி வாழ்ந்த கேரக்டரில் சன்னி லியோன் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது

இவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா? விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, நேற்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கியது என்பதும் நேற்று மாலை நடந்த

விவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தினார்கள் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று இறுதி மரியாதை

அஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்!

அஜீத், சூர்யா உள்பட ஒருசில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது