இவருக்கு பதில் இவர்.. 'பொன்னி' சீரியலில் இருந்து விலகிய நடிகைக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..!

  • IndiaGlitz, [Friday,June 14 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான 'பொன்னி’ சீரியலில் இருந்து பிரபல நடிகை ஒருவர் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த மார்ச் மாதம் விஜய் டிவியில் 'பொன்னி’ சீரியல் தொடங்கிய நிலையில் இந்த சீரியல் பெங்காலி மொழியில் பிரபலமான சீரியலின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 300 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சபரிநாதன். வைஷு சுந்தர் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய கேரக்டர்களில் ஸ்ரீதேவி அசோக், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன் உள்பட பலர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஹீரோ அம்மாவாக முதலில் ஷமிதா நடித்த நிலையில் அவர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென விலகி விட்டார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக சிந்துஜா விஜி என்பவர் ஹீரோவின் அம்மாவாக நடித்த நிலையில் தற்போது அவரும் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ’ஆனந்த ராகம்’ உள்ளிட்ட சீரியல்களை நடித்த ரிஹானா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவருக்கு பதில் இவர் என்ற டைட்டிலுடன் ஹீரோ அம்மாவாக நடிக்க இருக்கும் ரிஹானாவின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த அர்ச்சனா கல்பாத்தி.. விஜய் ரசிகர்கள் குஷி..!

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.

நிதி ஜோதிடத்தின் அற்புத ரகசியங்கள் - பணக்காரர் ஆகும் வழி!

பணம் சம்பாதிப்பது எப்படி என்பது தற்போதைய சூழலில் பெரும்பாலானோருக்கு இருக்கும் கவலை. இந்த கவலையை போக்கி, பொருளாதார செழிப்பை அடைய ஜோதிடம் எப்படி உதவும் என்பது குறித்து,

மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த 'தெகிடி' பட நடிகர்.. போலீசார் தீவிர விசாரணை..!

நடிகர் அசோக் செல்வன் நடித்த 'தெகிடி' திரைப்படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து அவரது மரணம் குறித்து காவல்துறையினர்

'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பில் விபத்து.. பிரபல நடிகருக்கு எலும்பு முறிந்ததாக தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தக்லைஃப்'.

கள்ளக்காதலியுடன் ஓட்டல் ரூமில் இருந்த நடிகர்.. கையும் களவுமாக பிடித்த நடிகரின் மனைவி..!

பிரபல நடிகர் தனது கள்ளக்காதலியுடன் ஹோட்டல் ரூமில் இருந்ததை அவருடைய மனைவி நேரில் பார்த்ததை அடுத்து இரு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளது.