அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா? என ஓப்பனாகவே கேட்டார்கள்.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை அதிர்ச்சி தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் தற்போது ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ஒளிபரப்பாகி வரும் நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சீசனில் நடித்த நடிகை ஒருவர் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா? என ஓப்பனாகவே கேட்டார்கள் என்று அதிர்ச்சி தரும் தகவலை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடிகை சித்ரா நடித்து வந்த நிலையில் அவர் எதிர்பாராத வகையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அந்த கேரக்டரில் காவ்யா அறிவுமணி நடித்த நிலையில் அவரும் திடீரென விலகியதை அடுத்து அந்த கேரக்டரில் அதன் பின்னர் நடித்தவர் லாவண்யா என்பது அந்த சீரியலை பார்த்து அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் லாவண்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஓப்பனாகவே தன்னிடம் கேட்டார்கள் என்றும் திறமையால் முன்னுக்கு வந்து விடலாம் என்று நினைக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன் என்றும் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லவில்லை என்பதால் நிறைய வாய்ப்புகளை இழந்தேன் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் என்னுடைய திறமைக்கு மதிப்பு கொடுத்து ’சிப்பிக்குள் முத்து’ ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஆகிய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் குறிப்பாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் என்னை முல்லை என்ற கேரக்டராகவே மக்கள் கொண்டாடினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் படிப்பை முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் எங்கள் குடும்பம் சென்னைக்கு வந்தது என்றும் அப்போது சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அதன் பின்னர் ’சிப்பிக்குள் முத்து’ ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ போன்ற சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது என்றும் தற்போது நான் கை நிறைய சம்பாதிக்கிறேன், என் குடும்பத்திற்கு தேவையானதை வாங்கி தருகிறேன் என்றும் மகிழ்ச்சியாக அந்த பேட்டியில் நடிகை லாவண்யா தெரிவித்துள்ளார்.
அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை லாவண்யா இந்த பேட்டியில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com