'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை.. எப்படி என ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி சீசன் 5 வரும் 27ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் பாகத்தில் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்த ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சுஜிதா என்பதும் இவரது நடிப்புக்காகவே அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிகை சுஜிதாவுக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் மூன்று வளர்ந்த பையன்களுக்கு அம்மாவாக நடிக்க முடியாது என்று சுஜிதா கூறியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து தான் அந்த கேரக்டரில் தற்போது நிரோஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் சுஜிதா மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ’குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் சுஜிதாவை ஒரு போட்டியாளராக கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வடிவுக்கரசி, பிரியங்கா, ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான் உள்ளிட்ட சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் குக் ஆக கலந்து கொள்ள இருக்கும் நிலையில் தற்போது சுஜிதாவும் இணைந்து உள்ளதை அடுத்து இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com