'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தீபிகாவா இவர்? வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனங்கவர்ந்த சீரியலாக இருக்கும் நிலையில் அவற்றில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் ஸ்பெஷல் என்று கூறலாம். ஐந்து அண்ணன் தம்பிகள் கதை கொண்ட இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் குடும்பத் தலைவிகள் உள்பட அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் இந்த சீரியலில் கடைக்குட்டி தம்பியாக நடித்து வரும் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வருபவர் தீபிகா. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் கலைஞர் டிவி, சன் டிவியில் தொகுப்பாளினியாகவும், அதன் பின்னர் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் விஜய் டிவிக்கு வந்த இவருக்கு ’சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது பள்ளிப்பருவ புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.