'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தம் காரணமாகவும், காதல் தோல்வி உள்பட ஒருசில காரணங்களாலும் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர், நடிகைகள் சிலர் தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை இந்தியாவியே அதிர வைத்தது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனால் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 

தற்போது மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமானவர் சித்ரா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 
சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு வயது 28

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா நிச்சயதார்த்த வீடியோ 

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.