close
Choose your channels

வெள்ளித்திரையில் ஹீரோவாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Monday, September 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த நடிகர் தற்போது வெள்ளி திரையில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 1 சீரியலில் நடித்தவர்களில் ஒருவர் குமரன் தங்கராஜன். இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருப்பதாகவும் இந்த தொடரில் கிடைத்த பிரபலம் காரணமாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் புதிய தொடரில் குமரன் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்ப அதிர்ச்சியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அப்டேட் கொடுத்துள்ளார்.

’லக்கி மேன்’ படத்தை இயக்கிய பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ஒன்றை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் தான் குமரன் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன், கவின் உட்பட பல சின்னத்திரை நடிகர்கள் பெரிய திரையில் அறிமுகம் ஆகி வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வரிசையில் குமரனும் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவாக வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment