விஜய் கட்சி தொடங்கியது எனக்கு மிகவும் வருத்தம்: 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' நடிகரின் வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,February 07 2024]

விஜய் அரசியல் கட்சி தொடங்கியது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாக ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருடைய கட்சிக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்துவரும் வெங்கட் ரங்கநாதன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

நமது ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கனவு இருக்கிறது, அதேபோல் என்னுடைய வாழ்க்கையிலும் நிறைய கனவுகள் இருந்தது. அந்த கனவு என்னவென்றால் ஒரே ஒரு காட்சியிலாவது தளபதி விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிகளையும் நான் எடுத்துக் கொண்டே வருகிறேன்.

ஒரு காட்சியில் அவருடன் கூட நின்றால் கூட போதும் என்று நான் தினமும் இறைவனை வேண்டிக் கொண்டு வருகிறேன். அவ்வாறு கடவுளை வேண்டி வேண்டி அது இப்போது என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

இந்த நிலையில் தளபதி விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதால் இன்னும் ஒரு படம்தான் நடிப்பேன் என்று கூறியிருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவருடன் இணைந்து நடிக்க தொடர்ந்து முயற்சி செய்வேன்’ என்று கூறியுள்ளார்.

More News

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு : விஷாலின் அதிரடி அரசியல் அறிக்கை..!

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் இன்று விஷால் தொடக்க இருக்கும் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகின.

ரஜினி உள்பட பிரபலங்களின் பட இசையமைப்பாளர் காலமானார். திரையுலகம் இரங்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'நான் அடிமை இல்லை' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71. சென்னையில் அவர் காலமான

கமல்ஹாசனின் அடுத்த தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் - லோகேஷ் கனகராஜ்.. சூப்பர் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. மீண்டும் இணையும் செல்வராகவன் - தனுஷ்..!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான வெற்றி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினியின் 'லால் சலாம்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில்