கவரிங் நகைகள் போட்ட தங்க மயிலுக்கு ஆப்பு: 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியல் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் என்று கூறியதை அடுத்து இந்த சீரியலின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அதில் ’கல்யாணத்துக்கு போட்ட நகைகள் அனைத்தையும் போட்டு வந்து விடு, அதை லாக்கரில் வைத்து விட்டோம் என்று மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறிவிடலாம் என பாக்கியம், தங்கமயிலிடம் போனில் கூறுகிறார். அதற்கு சரி என்று தங்கமயில் கூறிய நிலையில் பாண்டியனின் மகள் குழலி ’மறு வீட்டுக்கு போகும்போது இவ்வளவு நகைகள் எதற்கு? என்று கழட்டி வைத்து விடுகிறார்.
இந்த நிலையில் தங்கமயில் பெற்றோருக்கு கடன் கொடுத்தவர்கள் வந்து சத்தம் போட அப்போது சரவணன் என்ன என்று விசாரிக்கிறார். கல்யாணத்திற்காக கொஞ்சம் கடன் வாங்கி இருந்தோம், அந்த கடனை கேட்டு வந்திருக்கிறார்கள் என்று பாக்கியம் கூறிய நிலையில் தங்கமயில் நகைகள் வீட்டில் சும்மா தானே இருக்கிறது, அதை அடகு வைத்து கடனை அடைத்து விடலாம்’ என்று சரவணன் கூறுகிறார். இதனால் தங்கமயில் பெற்றோர் அதிர்ச்சி அடைவதுடன் இந்த முன்னோட்ட வீடியோ முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக தங்கமயிலுக்கு அவருடைய பெற்றோர் கவரிங் நகைகளை போட்டு, தங்க நகைகள் என்று ஏமாற்றி இருந்த நிலையில் தற்போது அது அம்பலத்துக்கு வந்துவிடும்போல் தெரிகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இரண்டு மணி நேரத்தில் இது குறித்து விறுவிறுப்பான காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலை ரெகுலராக பார்த்து வரும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com