'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தங்கமயிலுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் படுத்த படுக்கையாய்.. அதிர்ச்சி புகைப்படம்?

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடத்தை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த சீரியலில் பாண்டியன் - கோமதி தம்பதிக்கு சரவணன், செந்தில், கதிர் ஆகிய மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் இந்த மூன்று மகன்களுக்கு தங்கமயில், மீனா மற்றும் ராஜி ஆகிய மனைவிகள் உள்ளனர் என்பதும் இந்த எட்டு கேரக்டர்களை வைத்து விறுவிறுப்பாக இந்த சீரியல் கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சரவணன் மனைவியாக தங்கமயில் கேரக்டரில் நடிக்கும் நடிகை சரண்யா இந்த சீரியலில் என்ட்ரி ஆனதிலிருந்து அவரது வில்லத்தனம் ஆரம்பித்துவிட்டது என்பதும் அதன் பிறகு தான் சீரியலில் திருப்புமுனை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் சரண்யா தனது சமூக வலைத்தளத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அவரது காலில் அடிபட்டு இருப்பது போன்று அந்த புகைப்படங்களில் உள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த பதிவில் தனக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக வலி இருப்பதால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாகவும், தற்போது படிப்படியாக குணமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்துட்டு அப்புறம் குடிக்கிறவனை குறை சொல்றீங்க: பா ரஞ்சித்தின் 'பாட்டில் ராதா' டீசர்..!

பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது தயாரிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன

மேஷ ராசி பலன்கள் 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை ஆதித்ய குருஜி கணிப்பு !

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த மூன்று மாதங்கள் இனிய துவக்கத்தைத் தரும். திருமண தடை இருப்பவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் திருமண வாய்ப்புகள் கிடைக்கும்.

நடிகை சுனைனாவை திருமணம் செய்ய போவது ஒரு பிரபல யூடியூபரா? புகைப்படம் வைரல்..!

நடிகை சுனைனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தமானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல் கசிந்து உள்ளது.

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று அவரது வீட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இது குறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! முதல் விமர்சனம் தந்த பிரபலம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம்  தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலம் 'கங்குவா' படத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன்