ஹேப்பி பர்த்டே கணவரே.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' நடிகைக்கு கல்யாணம் ஆயிருச்சா? ரசிகர்கள் அதிர்ச்சி..!
- IndiaGlitz, [Friday,July 19 2024]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடித்து வரும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே’ என்று பதிவு செய்துள்ளதை அடுத்து ’உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா’ என்று ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் மற்றும் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் சரண்யா துரோடு. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’நெஞ்சம் மறப்பதில்லை’ ’ஆயுத எழுத்து’ போன்ற சீரியல்களில் நடித்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’ரன்’ என்ற சீரியலில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் மூத்த மகன் சரவணன் மனைவி தங்கமயில் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா துரோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்வார்.
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி பதிவு செய்துள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய கணவர் அவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பார்த்து ’உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? யாருக்குமே தெரியாதே, காண்பதெல்லாம் உண்மையா இல்லை கனவா’ என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.