close
Choose your channels

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இவருக்கு பதில் இவர்.. வெளியேறுவது யார்?

Friday, July 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஏற்கனவே ஒரு சில கேரக்டரில் நடிக்கும் நட்சத்திரங்கள் மாற்றப்பட்ட நிலையில் தற்போது முக்கிய கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஒருவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும் அவருக்கு பதில் நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் முதல் பாகத்தில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்ட கதையாக இருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் அப்பா மகன்கள் பாசத்தை வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பாண்டியனின் 3 மகன்களுக்கும் திருமணம் ஆன நிலையில் மூன்று மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த காட்சிகள் தற்போது சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் செந்தில் என்ற கேரக்டரில் நடித்து வரும் வசந்த் வசி என்பவர் இந்த தொடரில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வசந்த் வசி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இருந்து விலக இருக்கும் நிலையில் இவருக்கு பதிலாக முதல் பாகத்தில் ஜீவா என்ற கேரக்டரில் நடித்த வெங்கட் ரங்கநாதன் என்பவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .

ஏற்கனவே முதல் பாகத்தில் வெங்கட் ரங்கநாதன் மற்றும் ஹேமா ஜோடியாக நடித்திருந்த நிலையில் இதே ஜோடி தான் தற்போது மீண்டும் இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் ஜோடியே மீண்டும் இரண்டாம் பாகத்தில் இணைவதால் இந்த மாற்றம் பெரிய அளவில் வித்தியாசமாக இருக்காது என்று இந்த தொடரை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment