என்ன ஆச்சு நிரோஷாவுக்கு? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்புக்கு தூக்கி கொண்டு வந்த நடிகர்..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

நடிகை நிரோஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் 2 என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்புக்கு, அவரை அவரது மகன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதனால், நிரோஷாவுக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிரோஷா, அதன் பின்னர் கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம், விஜயகாந்துடன் செந்தூரப்பூவே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். மேலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரில் நளினியுடன் இணைந்து நடித்த அவர், அந்த கேரக்டரின் மூலம் மிகப் பிரபலமாகியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, அவரை அவரது மகன் கேரக்டரில் நடித்துவரும் கதிர்வேல் தூக்கிக் கொண்டு வந்த வீடியோ, அவரது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நிரோஷாவுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நிரோஷாவுக்கு முதுகுவலி என்றும், அதனால் தான் அவரை தூக்கி கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

More News

நீங்க ஓட்டு போடனும்ன்னு அவசியம் இல்லை.. திடீரென ஆவேசமான ஜெப்ரி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென போட்டியாளர் ஜெப்ரி, மற்ற போட்டியாளர்களை நோக்கி, "

அனிருத்தின் மேஜிக்கல் வாய்ஸ்: 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் சிங்கிள் பாடல்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் அனிருத் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? விஜய் ஆண்டனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்..!

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில்,

மான நஷ்ட வழக்குப்பதிவு செய்துள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர்.. என்ன காரணம்?

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஊடகங்கள் மற்றும் YouTube சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏங்க இவ்வளவு வன்மத்தோட வாழுறீங்க.. பிக்பாஸ் போட்டியாளர் கேட்ட ஆவேசமான கேள்வி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.