என்ன ஆச்சு நிரோஷாவுக்கு? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' படப்பிடிப்புக்கு தூக்கி கொண்டு வந்த நடிகர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நிரோஷா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாண்டியன் ஸ்டோர் 2" என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படப்பிடிப்புக்கு, அவரை அவரது மகன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதனால், "நிரோஷாவுக்கு என்ன ஆச்சு?" என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "அக்னி நட்சத்திரம்" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிரோஷா, அதன் பின்னர் கமல்ஹாசனுடன் "சூரசம்ஹாரம்", விஜயகாந்துடன் "செந்தூரப்பூவே" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதன் பின்னர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். மேலும், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடரில் நளினியுடன் இணைந்து நடித்த அவர், அந்த கேரக்டரின் மூலம் மிகப் பிரபலமாகியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது "பாண்டியன் ஸ்டோர்ஸ் 2" சீரியலில் கோமதி கேரக்டரில் சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின் போது, அவரை அவரது மகன் கேரக்டரில் நடித்துவரும் கதிர்வேல் தூக்கிக் கொண்டு வந்த வீடியோ, அவரது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், "நிரோஷாவுக்கு என்ன ஆச்சு?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நிரோஷாவுக்கு முதுகுவலி என்றும், அதனால் தான் அவரை தூக்கி கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout