'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இருந்து விலகும் ராஜி.. வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,November 02 2024]

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை அந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறப்படுவதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் தொடங்கியது. இந்த சீரியல் தற்போது முதல் சீசன் போலவே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு அப்பா, மூன்று மகன்கள், மூன்று மருமகள்கள், மற்றும் 2 மகள்கள் என விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் இரண்டாவது மகன் கதிரின் மனைவியாக ராஜி என்ற கேரக்டரில் நடிகை ஷாலினி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ஷாலினி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாகத்தான் சீரியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், அவர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது குறித்து விஜய் டிவி தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.