சீரியஸான நிலையில் சின்னத்திரை நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,November 28 2020]

சமீபத்தில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உள்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருந்த நடிகர் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்த நிலையில் இந்த சோகத்திலிருந்து திரையுலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது மேலும் ஒரு தொலைக்காட்சி நடிகை சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பூவே பூச்சூடவா, பாண்டியன் ஸ்டோர் உள்பட பல தொலைக்காட்சி தொடர்களில் பாட்டி வேடத்தில் நடித்தவர் கௌசல்யா செந்தாமரை. இவர் தற்போது உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

நடிகை கவுசல்யா செந்தாமரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தகவல் சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்