'பாண்டவர் இல்லம்' சீரியலில் கர்ப்பமான நடிகை நிஜத்திலும் கர்ப்பம்: ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பாண்டவர் இல்லம்’ சீரியலில் கர்ப்பமாக இருப்பதாக நடித்து வரும் நடிகை ஒருவர் நிஜத்திலும் கர்ப்பமாக உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது ’பண்டவர் இல்லம்’ என்பதும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து அண்ணன் தம்பிகள் இடையே நடக்கும் பாசப் போராட்டம் மற்றும் மருமகள்களின் ஒற்றுமை வேற்றுமைகளை நகைச்சுவையுடன் குடும்பபாங்குடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் அனைத்து தரப்பினருக்கும் இந்த சீரியல் விருப்பத்திற்குரிய சீரியலாக மாறி வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அனு. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மெல்ல திறந்தது கதவு’ உள்பட பல சீரியல்களில் அனு நடித்துள்ளார்.
இந்தநிலையில் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் தற்போது கர்ப்பிணியாக ரோஷினி கேரக்டரில் நடித்து வரும் அனு, தற்போது உண்மையாகவே கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்த சந்தோஷமான செய்தியை அவர் தனது கணவருடன் கூடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் கர்ப்பமாகி உள்ள நடிகை அனுவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தான் கர்ப்பமானது குறித்து அனு கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு தேவதையை என் வயிற்றில் கொஞ்ச நாளாக ரகசியமாக வைத்திருக்கிறேன். ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் உற்சாகத்தையும் அதிர்ஷ்டத்தையும் இன்னும் சில மாதங்களில் பெற இருக்கின்றேன். நான் இதற்கு முன்பு இந்த மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை. எனது இனிய கணவருக்கு அவரது வாழ்க்கையில் சிறந்த பரிசை வழங்கப் போகிறேன். நாங்கள் பெற்றோராக மாறா போகிறோம். கடவுளின் கிருபையால் 4 மாத கர்ப்பமாக இருக்கின்றேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments