அந்தரத்தில் 'பாண்டவர் இல்லம்' நடிகை.. பலூன் ஊஞ்சலில் கர்ப்பிணி போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Wednesday,December 28 2022]

அந்தரத்தில் பலூன் ஊஞ்சலில் ’பாண்டவர் இல்லம்’ சீரியல் நடிகை எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அனு நடித்து வருகிறார் என்பதும் இவருக்கு ஏற்கனவே இவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் சமீபத்தில் தனது கணவருடன் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்திய நடிகை அனு அதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கணவருடன் பலூன் ஊஞ்சலில் அந்தரத்தில் தொங்கும் புகைப்படங்கள் மற்றும் தனியாக பலூன் ஊஞ்சலில் இருக்கும் புகைப்படங்களை அனு பதிவு செய்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் போது போட்டோஷூட் என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறி விட்டாலும், நிறைமாத கர்ப்பிணி பாதுகாப்பு இன்றி அந்தரத்தில் தொங்கியவாறு எடுத்த போட்டோ ஷூட் எடுக்க வேண்டுமா? என அவருக்கு ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.