'பாண்டவர் இல்லம்' சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Friday,February 24 2023]

’பாண்டவர் இல்லம்’ சீரியல் நடித்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ’பாண்டவர் இல்லம்’ என்பதும் இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ரோஷிணி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார். குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஷினி பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

ரோஷினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு வளைகாப்பு நடந்தது. கணவர் மற்றும் குழந்தை மட்டுமே கலந்து கொண்ட அந்த வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை அடுத்து குழந்தையின் புகைப்படமும் வைரலகி வருகிறது.

More News

'பொன்னியின் செல்வன்' ரிலீஸ் தேதி மாற்றமா? படக்குழுவினர் விளக்கம்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை குவித்தது

காஷ்மீரில் செம அப்டேட்டை வெளியிட்ட லெஜண்ட் சரவணன்.. வைரல் புகைப்படங்கள்..!

தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜெண்ட்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

என்ன சொல்ல வர்ற.. ஒண்ணுமே புரியலையே.. பிரேம்ஜியின் 'சத்திய சோதனை' டிரைலர்..!

நகைச்சுவை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'சத்திய சோதனை' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில்

தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? என்ன கேரக்டர் தெரியுமா?

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'காதல் கொண்டேன்' 'புதுப்பேட்டை' 'மயக்கம் என்ன' உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தில் செல்வராகவன்

சிம்புவின் வருங்கால மனைவி இலங்கை தமிழ்ப்பெண்ணா? எப்போது திருமணம்?

நடிகர் சிம்புவின் வருங்கால மனைவி இலங்கை தமிழ் பெண் என்றும் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.