வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் முதல் அதிரடி நடவடிக்கை

  • IndiaGlitz, [Tuesday,October 20 2015]

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி அபார வெற்றி பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். இந்த தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் முன்னிலையில் அமைதியாக நடந்தாலும் ஒருசில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த தேர்தலில் பழம்பெரும் நடிகையான சச்சு அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டிருந்தது ஒரு விரும்பத்தகாத சம்பவமாக அனனவராலும் பார்க்கப்பட்டது. மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த அவர், தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து தனது அதிருப்தியை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர் தனது முதல் பணியாக மூத்த நடிகையான சச்சு அவர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டையை வழங்கியுள்ளனர். இந்த உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்ட நடிகை சச்சு தனது நன்றியை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளார். பாண்டவர் அணியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளதால் இனிவரும் காலங்களில் அவருடைய செயல்பாடுகள் ஆக்கபூர்வமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூர்யாவின் '24' படத்தின் வியாபாரம் தொடங்கியது.

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ...

அஜீத்-சூப்பர் ஸ்டார் வில்லன் படுகாயம். மருத்துவமனையில் அனுமதி

வளர்ந்து இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், அஜீத்துடன் நடித்த 'என்னை அறிந்தால்' சூப்பர் ஹிட் ஆகி அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது...

'வேதாளம்' - ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் வெளியானது?

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகிறது...

எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடனான ஒப்பந்தம் குறித்து சரத்குமார் அதிர்ச்சி தகவல்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாண்டவர் அணியினர் செய்யும் முதல் வேலை SPI நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வது...

நடிகர் சங்க தேர்தல்: செயற்குழு உறுப்பினர்களின் வெற்றி விபரம்

நடிகர் சங்க தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் துணைத்தலைவர்களின் முடிவுகள் நேற்று இரவே வெளிவந்துவிட்ட நிலையில்...