நடிகர் சங்க தேர்தல்: பாண்டவர் அணி அபார வெற்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று நேற்றிரவே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. தலைவர், துணைத்தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய அனைத்து முக்கிய பதவிகளையும் பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணி கைப்பற்றியது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,344 வாக்குகளும், சரத்குமாருக்கு 1,235 வாக்குகளும் கிடைத்தது. 109 வாக்குகள் வித்தியாசத்தில் நாசர் வெற்றி
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்ட்யிட்ட விஷாலுக்கு 1,445 வாக்குகளும், ராதாரவிக்கு 1,138 வாக்குகளும் கிடைத்தது. 307 வாக்குகள் வித்தியாசத்தில் விஷால் வெற்றி
பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திக்கு 1,493 வாக்குகளும், எஸ்.எஸ்.ஆர்.கண்ணனுக்கு 1,080 வாக்குகளும் கிடைத்தது. 413 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்தி வெற்றி
துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்ட கருணாஸ் 1,362 வாக்குகளும், பொன்வண்ணனுக்கு 1,235 வாக்குகளும் பெற்றனர். சிம்பு 1,107 வாக்குகளும், விஜயகுமார் 1,115 வாக்குகளும் பெற்றனர். கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுக்கு பின்னர் பேட்டியளித்த நாசர் கூறியதாவது: இந்த தேர்தல் யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று நிகழ்ந்த நிகழ்வு அல்ல. ஒரு மாற்றம் வர வேண்டும் என்று நினைத்தோம். அது நடந்துள்ளது. சரத்குமார் எனக்கு வாழ்த்து தெரிவித்து முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளார். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவோம். தேர்தல் சிறப்பாக நடத்த உதவியக் முதல்வர், காவல்துறை, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி' என்று கூறினார்.
விஷால் இந்த வெற்றி குறித்து கூறியதாவது, " நாசரின் 18 ஆண்டுகால கனவு நிறைவேறியிருக்கின்றது. தேர்தலை சிறப்பாக நடத்த உதவிய முதல்வர் ஜெயலலிதா, போலீசார் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் நடிகர் சரத்குமார் கூறியதாவது: நாசர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பிருந்த காழ்ப்புணர்ச்சியை மறந்துவிட்டு, நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்படவேண்டும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ஏன் சிறந்தது என்பது பற்றி விளக்கி கூறுவேன். தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் உதவி செய்வேன். இதை எனது தோல்வியாக கருதவில்லை, எதிர் அணியின் வெற்றியாக பார்க்கிறேன். நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்”
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout