மூன்று மாநிலங்கள், மூன்று கதைகள், பிரம்மாண்ட பான் இந்திய திரில்லர் திரைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஃபைனான்ஸியல் திரில்லராக, பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜீப்ரா. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் 2024 அக்டோபர் 31 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது.

தமிழில் முதல் ஓடிடி திரைப்படமான பெண்குயின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான திரில்லர் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

ZEE தமிழ் தொலைக்காட்சியில், பெரும் வெற்றி பெற்ற செம்பருத்தி சீரியலின் தயாரிப்பாளர்கள், தங்களது முதல் திரைப்படமாக இப்படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

அரசின் அதிகாரமிக்க உலகில் நிகழும், நிதி குற்றங்களை ஆராயும் இப்படத்தின் கதைக்களம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மூன்று வெவ்வேறு கதைகள் ஒன்றாக இணையும் இப்படத்தில், தென்னிந்தியத் திரைத்துறையின் மூன்று முக்கிய நட்சத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் முதன்மை பாத்திரம் ஏற்று நடித்துள்ளனர். தமிழிலிருந்து சத்யராஜ், தெலுங்கு சினிமாவில் இருந்து சத்யதேவ், கன்னடத்தைச் சேர்ந்த தனஞ்சயா என நட்சத்திர நடிகர்கள் இப்படத்திற்காக கைகோர்த்திருக்கின்றனர்.

இவர்களுடன், பிரபல நடிகர்களான பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில் வர்மா, சுரேஷ் மேனன் மற்றும் சத்யா அக்கலா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

சலார் மற்றும் கேஜிஎஃப் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது அதிரடியான பின்னணி இசை, இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம் மற்றும் தினேஷ் சுந்தரம் இணைந்து, மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படைப்பாக தயாரித்துள்ளனர்.

நம்மைச் சுற்றி நிகழும் பெரும் நிதி குற்றத்தின் நாம் அறிந்திராத பக்கங்களை சொல்லும் ஒரு அதிரடி சஸ்பென்ஸ், திரில்லர் அனுபவத்திற்கு தயாராகுங்கள். ஜீப்ரா தீபாவளி பண்டிகை தினமான அக்டோபர் 31, 2024 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

More News

2025-ம் ஆண்டு ராசிபலன் : உங்கள் ராசிக்கு என்ன பலன்கள்..?

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில் நடைபெற உள்ள முக்கியமான கிரக பெயர்ச்சிகள் மற்றும்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த விஜய்.. அமைச்சர் உதயநிதி கூறிய கமெண்ட்..!

நேற்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், பெரியார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படம்: கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி பாராட்டு..!

செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என கிரிக்கெட் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லாரியை பல கிமீ துரத்தி பிடித்த பிரபல நடிகை: சினிமா பாணியில் ஒரு நிஜ சேஸிங்!

சினிமா பாணியில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை பிரபல நடிகை ஒருவர் தனது காரில் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்: விமல் நடித்த 'சார்' டிரைலர்..!

விமல் நடித்த "சார்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.