விக்கிலீக்ஸ் அசாஞ்சே கைது: அமெரிக்கா, பிரிட்டனை வறுத்தெடுத்த நடிகை!

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

விக்கிலீக்ஸ் அசாஞ்சே கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில் இன்று பிரிட்டன் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். ஈக்வடார் தூதரகத்தில் இருந்து அசாஞ்சாவை கைது செய்து குண்டுக்கட்டாக போலீசார் தூக்கி வரும் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அசாஞ்சவின் கைதுக்கு உலகம் முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் தனது சமூக வலைத்தளத்தில் அசாஞ்சே கைதுக்கு கடும் கண்டங்களை தெரிவித்துள்ளார். அசாஞ்சே கைது செய்யப்பட்ட வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அமெரிக்காவின் அடிமையாகிவிட்டதா பிரிட்டன்? பிரக்சிட் விவகாரத்தை திசை திருப்புவதற்காக இந்த நாடகமா? என்று கடுமையாக பதிவு செய்துள்ளார்.

ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சே இருந்தபோது அவரை ஓரிருமுறை பமீலா ஆண்டர்சன் சந்தித்துள்ளதாகவும் இருவரும் காதலர்கள் என்றும் வதந்திகள் எழுந்தன. ஆனால் பின்னாளில் பமீலா ஆண்டர்சன் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது