மும்பையில் புதிதாகப் பரவும் தடுப்பூசியே இல்லாத ரத்தக்கசிவு காய்ச்சல் நோய்!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே கொரோனா நோய் தாக்கம் கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் தற்போது புதிய தொற்றுநோய் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கோ காய்ச்சல் எனப்படும் புதிய தொற்றுநோய் மும்பையின் பல்வேறு நகரங்களில் தற்போது சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அம்மாநில சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கயா பகுதிகளில் சிலருக்கு இந்தப் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கிரிமியன் காங்கோ காய்ச்சல் எனப்படும் இத்தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான ரத்தக் கசிவினை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருக்கமாக இருந்தால் மற்றவர்களுக்கும் இத்தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உண்ணிகளில் இருந்து பரவும் இத்தொற்று நோய் பல காலமாக மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இதுவரை இத்தொற்று நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப் படவில்லை என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. நோயின் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து இந்நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் நோய்த்தொற்று ஏற்பட்ட 40% மக்கள் இறக்க வேண்டியிருக்கும் எனவும் மும்பை சுகாதாரத்துறை கடுமையான எச்சரிக்சையை விடுத்து இருக்கிறது.

ஏற்கனவே கொரோனா தாக்கத்தால் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் மும்பை மாநராட்சி இப்புதிய தொற்றை குறித்து மக்களுக்கு தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசியே இல்லாத தொற்றுநோய் என்பதால் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிறு காய்ச்சலைக் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் ஆரம்பத்திலேயே மருத்துவமனைக்கு வரவேண்டும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றனர்.