பெண் எம்எல்ஏ வேட்பாளருக்கு ஆபாச வீடியோ மிரட்டல்… சைபர் கிரைம் விசாரணை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை பல்லாவரம் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வீரலட்சுமி (35). இவர் கடந்த 17 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனு தாக்கலுக்கு பிறகு அவருடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ ஒன்று அனுப்பப்பட்டதாகவும் பின்னர் தொடர்ந்து இத்தகைய ஆபாச வீடியோக்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வீரலட்சுமி இன்னும் 3 நாட்களுக்குள் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும். இல்லையென்றால் நானே அந்த நபரை கண்டுபிடித்து அவரது ஆணுறுப்பை அறுத்துவிடுவேன் எனவும் ஆவேசமாக கருத்து வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியது யார் என்பது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments