பெண் எம்எல்ஏ வேட்பாளருக்கு ஆபாச வீடியோ மிரட்டல்… சைபர் கிரைம் விசாரணை!

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

சென்னை பல்லாவரம் தொகுதியில் மை இந்தியா கட்சி சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் வீரலட்சுமி (35). இவர் கடந்த 17 ஆம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்புமனு தாக்கலுக்கு பிறகு அவருடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச வீடியோ ஒன்று அனுப்பப்பட்டதாகவும் பின்னர் தொடர்ந்து இத்தகைய ஆபாச வீடியோக்கள் வந்து கொண்டே இருப்பதாகவும் பரங்கிமலை துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வீரலட்சுமி இன்னும் 3 நாட்களுக்குள் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்யவேண்டும். இல்லையென்றால் நானே அந்த நபரை கண்டுபிடித்து அவரது ஆணுறுப்பை அறுத்துவிடுவேன் எனவும் ஆவேசமாக கருத்து வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் எம்எல்ஏ வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் வீரலட்சுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பியது யார் என்பது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

அமீர்கானுக்கு கொரோனா பாதிப்பு: உடன் நடித்த நாயகிக்கும் பாசிட்டிவ்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட்

மோடியா? இந்த தாடியா? மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் நடிகர் கமல்ஹாசன்!

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 5 முனை போட்டி நிலவுகிறது.

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு… ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் சில புதிய விதி!

நாடாளுமன்றத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்பு New wage code Bill எனும் புதிய சட்டம் இயற்றப்பட்டது.

பாஜக-அதிமுக கட்டிய எய்ம்ஸ் மருத்துமனை இதுதான்… செங்கலை காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

ரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன

ஸ்ரீப்ரியாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த குடிகார ரசிகர்! தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!

உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுபவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் கடந்த சில நாட்களாக மயிலாப்பூர் தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்