ஒரே நாளில் பழிவாங்கும் படலம். நாலரை வருடங்களில் என்னென்ன நடக்குமோ?

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்தில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் முதல் நாளிலேயே தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.

நாளை அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால்தான் முதல்வராக தொடர முடியும் என்ற நிலையில் பதவியேற்ற மறுநாளே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வரும் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லி பொதுப்பணித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. பொதுப்பணித்துறையும் முதல்வர் வசம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக காலி செய்யாத பட்சத்தில் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிவு நீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறதாம்.

பதவியேற்ற ஒரே நாளில் தனது பவரை முதல்வர் காண்பிப்பாதால் இன்னும் நான்கரை ஆண்டில் என்னென்ன நடக்குமோ என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.