சட்டப்பேரவைக்கு ஆப்சென்ட் ஆகாத ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி-சபாநாயகர் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்று சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் நேற்று நடைபெற்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழகச் சட்டப்பேரவை 167 நாட்கள் நடைபெற்று உள்ளது. இதன் மொத்த மணி நேரம் 858 மணி நேரம் 12 நிமிடம் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்தப் பேரவைக் கூட்டத்தொடரின்போது ஆளுங்கட்சியை காட்டிலும் எதிர்க்கட்சிக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதாவது 16 மணி நேரம் கூடுதலாக திமுகவிற்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகத் தகவல் கூறப்படுகின்றன. மேலும் சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன் முறையாக எல்லா நாட்களும் தவறாமல் கலந்து கொண்ட ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் சபாநாயகர் பகழாரம் சூட்டினார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் என்றும் சபாநாயகர் தனபால் நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவை வரலாற்றிலேயே ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத முதல்வராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்து இருக்கிறார். இதனால் அவருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com