ஸ்டாலினை முந்திய பழனிச்சாமி...! வாக்குப்பதிவுகள் எத்தனை வீதம் தெரியுமா...?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்தவர்களின் வாக்குப்பதிவுகள் வீதம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்யாபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
மிகுந்த பரபரப்புக்கும்,எதிர்பார்ப்பிற்கும் இடையில் சட்டமன்ற தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்தது. இதில் முதல்வர் வேட்பாளராக அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி , திமுக சார்பாக ஸ்டாலின், அமமுக சார்பாக தினகரன், மக்கள் நீதி மய்யம் சார்பாக நடிகர் கமல்ஹாசன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சீமான் உள்ளிட்டவர்கள் களம் கண்டனர். நேற்று காலை முதல் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், மூத்த குடிமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தினர்.
சினிமா நட்சத்திரங்கள் புதுவிதபாணியில் வந்து வாக்களித்தது சமூக வலைத்தளங்களையே புரட்டி போட்டுவிட்டதுஎன சொல்லலாம். ஒரு சில இடங்களில் evm மிஷின்கள் தகராறு செய்தாலும், ஆய்வாளரின் உதவியுடன் அவை பழுதுபாக்கப்பட்ட பின், மக்கள் வாக்களித்தனர். வன்முறை சம்பவங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீசாரின் கண்காணிப்புகள் தீவிரமாக இருந்ததால் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் நடந்த வாக்குப்பதிவுகளின் வீதம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார். அது குறித்து பின்வருமாறு,
• தமிழகத்தில் 72.78% வாக்குகள் பதிவான நிலையில், அதிகமான வாக்குகள்(83.92%) பதிவான மாவட்டம் கரூர் தான்.வாக்குகள் ஸ்டார் தொகுதிகளில் என்னென்ன நிலவரம் என்பதை இதில் பார்ப்போம்.
• முதல்வர் பழனிச்சாமி போட்டியிட்டுள்ள எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகி உள்ளது,
• திமுக தலைவர் ஸ்டாலின் களம்கண்ட கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகி உள்ளது.
• துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்ட போடி தொகுதியில், 73.65% வாக்குகள் பதிவாகியுள்ளது.
• மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில், 60.72% வாக்குகள் பதிவாகியுள்ளது.
• அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி.தினகரன் களமிறங்கிய கோவில்பட்டி தொகுதியில்
67.43% வாக்குகள் பதிவாகியுள்ளது.
• நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் போட்டியிட்ட திருவெற்றியூர் தொகுதியில், 65% வாக்குகள் பதிவாகியுள்ளது.
• தமிழகத்திலே மிகக்குறைவான(59.06%) வாக்குகள் பதிவானது சென்னையில் தான். அதிலும் நகரில் அண்ணாநகர் 57.02%, மயிலாப்பூர் 56.59, வேளச்சேரி 55.95 தி.நகர் 55.92%, வில்லிவாக்கம் 55.52% உள்ளிட்ட இடங்களில் மிகக் குறைவான அளவில் வாக்குவீதம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com