Download App

Pakkiri Review

பக்கிரி : ஐரோப்பாவையும் கலக்கும் தனுஷ் 

நம்ம தனுஷ் கோலிவுட் மற்றும் பாலிவுட்டை வென்று ஐரோப்பிய சினிமாவில் காலடி பதித்திருக்கிறார் என்ற ஒன்றேய போதும் பக்கிரி படத்தை நோக்கி நாம் படை எடுக்க ஆனால் அங்கே நாம் எதிர்பார்த்ததை விட ஒரு அழகான படைப்பு விருந்தாக கிடைப்பது இன்ப அதிர்ச்சிதான். 

ராஜூவாக அறிமுகமாகும் தனுஷ் ஒரு மந்திரம் தெரிந்த நபர் தவறு செய்துவிட்டு சிறைக்கு செல்ல தயாராக இருக்கும் மூன்று சிறுவர்களிடம் தான் ஒரு கதை சொல்ல போவதாக சொல்லி தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி கூறுகிறார். ராஜு சொல்லும் கதை பிரகாரம் அவர் தந்தை யாரென்றே தெரியாமல் தாயின் அரவணைப்பில் மும்பை சேரியில் வளர்பவர். அவர் கனவு என்றாவது ஒரு நாள் பாரிஸ் செல்வது அதன் படி அவர் எப்படி எதுவுமே இல்லாமல் தன் கனவு நகரத்திற்கு சென்று பின் விதியின் சதியால் எங்கெங்கோ பயணப்பட்டு காதலில் விழுந்து ஒரு அகதி கூட்டத்துக்கு ஆபத்பாந்தவனாக மாறி பின் உண்மையான மந்திரம் மற்றும் சந்தோசம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வதே இந்த பக்கிரியின் கதை. 

பக்கத்துக்கு வீட்டு பையனாய் பெரும்பாலும் நடித்து குறிப்பாக இளவட்டங்களை கைவந்த தனுஷ் பின் ரஞ்சனா மற்றும் ஷமிதாப் போன்ற படங்களின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி கோடி நாட்டி வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்த பக்கிரி மூலம் ஐரோப்பிய சினிமாவுக்குள்ளும் மிக எளிமையாக நுழைந்து தன்னுடைய எளிமையான எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்ந்திழுக்கிறார். காதல் சோகம் தாய் பாசம் கருணை நட்பு என அணைத்த்து உணர்வுகளையும் அழகாக அளவாக செய்து தான் நிஜத்தில் ஒரு உலக தரம் வாய்ந்த நடிகர் என்பதை நிறுவூபித்திருக்கிறார் கஸ்தூரிராஜாவின் புதல்வர். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்கள் தனுஷை வானுயர புகழ்ந்து கொண்டிருப்பதில் எந்த ஒரு ஆச்சிரியமும் இல்லை என்பதை படத்தில் பல இடங்களில் நிரூபிக்கிறார். இல்லை இல்லை இது பத்தாது எனக்கு கமர்ஷியல் வேண்டும் என்று அடம்பிடிக்கும் லோக்கல் ரசிகனையும் தனுஷ் ஏமாற்றவில்லை அந்த மாயா பஜார் பாடல் ஒன்று போதும் தியேட்டர் எழுந்து குத்தாட்டம் போட. அமெரிக்க நடிகை எரின் மோரியார்ட்டி தனுஷின் காதலியாக வந்து மனதை கொள்ளை அடிக்கிறார் குறிப்பாக அந்த கட்டில் விற்கும் கடையில் தனுஷ் அவரிடம் ஒரு கணவன் போல பேசி தன் காதலை உணர்த்த முற்படும்போது முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகி பின் அவரும் சேர்ந்து நாடகமாடி அதை கடைசி காட்சி வரை கொண்டு செல்வது அழகு. தனுஷ் மூலம் முறிந்த காதலை மீட்டெடுக்கும் நடிகையாக பெர்னிஸ் பீஜோ மற்றும் மஹாதேவன் அய்யாவாக நடிக்கும் பெரியவர், கதாநாயகியின் லெஸ்பியன் தோழி, சோமாலிய அகதி,  ஏமாற்றும் டாக்சி டிரைவர் என்று பல சுவாரசியமான கதாபாத்திரங்களில் அணைத்து நடிகர் நடிகைகளும் ஜொலிக்கிறார்கள் ஹீரோவின் தாயாக வரும் அம்ருத சாண்ட்க்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து 

பக்கிரியின் மிக பெரிய பலம் எளிமையாக கதை நகர்வதும் சுவாரசியம் எங்குமே தொய்வாகாமல் இருப்பதும் தான் உலகில் எங்கு அகதிகள் இருந்தாலும் அவர்கள் நிலை மிக பரிதாபமான ஒன்று என்பதை அழுத்தமாக பதிவு செய்து சபாஷ் பெறுகிறார் பக்கிரி. இங்கிலாந்து போலீஸ் நிலையத்தில் வரும் அந்த பாடல் மூலம் வசனம் பேசும் போலீஸ் காரர் குபீர் சிரிப்பை வரவழைக்கிறார். அதிக எதிர்பார்ப்பில்லாமல் போகும் எந்த ஒரு ரசிகனையும் ஏமாற்றாமல் திருப்பி அனுப்புகிறான் இந்த பக்கிரி. தமிழ் டப்பிங் தரமாக செய்யப்பட்டு இருப்பது இன்னொரு பெரிய பிளஸ். 

படத்தின் மிக பெரிய ஓட்டை என்று பார்த்தல் தனுஷ் சொல்லும் கதை நிஜமாகவே அந்த சிறுவர்கள் திருந்தவோ அல்லது பாடம் கற்கவோ உகந்ததா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகிறது. படத்தின் ஆமை வேக திரைக்கதை ஒரு பிரிவினரின் பொறுமையை சோதிக்கும் அதே போல் ஹீரோவுக்கு வாய்ப்பிருந்தும் ஹீரோயிச காட்சிகள் இல்லாமல் போனது இந்த வகை படங்களின் சுவையை குறைக்கத்தான் செய்கிறது. 

இசை மற்றும் பிற தொழில்நுட்பங்கள் சிறப்பான பங்களிக்க இயக்குனர் கென் ஸ்காட் தன நடிகர்களிடம் குறிப்பாக தனுஷிடம் ஆகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தான் சொல்ல வேண்டிய கருத்துகளை சுவாரசியம் குறையாமல் சொன்ன விதத்தில் சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறார். 

தனுஷின் சினிமா வாழ்க்கையின் மற்றும் ஒரு சிறப்பான நடிப்புக்காகவும் பொழுதுபோக்குடன் நல்ல மெசேஜுகளுக்காகவும் இந்த பக்கிரியை தாராளமாக தியேட்டருக்கு சென்று கை தட்டி ரசிக்கலாம். 

Rating : 3.3 / 5.0