Pakka Review
பக்கா - மொக்க திருவிழா
நடிகர் விக்ரம் பிரபு மீண்டும் ஒரு முறை தான் தவறான கதைகளையும் கத்து குட்டி இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதிலும் தனக்கு நிகர் தானே என்பதை நிருபித்திருக்கிறார். கொஞ்சம் கூட சுவாரசியமா கதை போக்கோ இல்லாத இந்த படத்தில் நடித்தது மூலம் தன் திரையுலக பயணத்திலேயே படு மோசமான அனுபவத்தை பார்ப்பவர்களுக்கு தந்திருக்கிறார்.
தோணி குமார் என்கிற விக்ரம் பிரபு அறிமுக காட்சியில் நாம் பல படங்களில் பார்த்து நொந்து போன அஜித்தின் ஆளுமா டோலுமா பாடலுக்கு ஆடியபடி அறிமுகமாகிறார். டைட்டிலில் வீரத்திலகம் விக்ரம் பிரபு என்று போடுகிறார்கள் அவர் தாத்தா நடிகர் திலகம் மன்னிப்பாராக. பாடலின் முடிவில் குடி போதையில் ரயில் தண்டவாளத்துக்கு நடுவில் படுத்துக்கொள்கிறார். ரயில் பக்கம் வர டைட்டிலும் ஒரு வழியாக முடிய கண் விழிக்கும் விக்ரம் பிரபு கண்ணில் படுகிறார் பக்கத்துக்கு தண்டவாளத்தில் படுத்திருக்கும் பிந்து மாதவி. அவரை விக்ரம் பிரபு காப்பாற்ற அவரோ தன் தற்கொலை முயற்சிக்கு காரணமே நீதான் என்று சஸ்பென்ஸ் வைக்கிறார். அவரை பாண்டி என்று அழைக்கும் பிந்து பின் கையில் தழும்பில்லாததை கவனித்து தன் காதல் கதையை சொல்கிறார் பிளாஷ் பாக் ஒன்று ஆரம்பிக்கிறது. ஊர் திருவிழாவில் சூரியுடன் சேர்ந்து பொம்மை விற்கும் பாண்டியாக விக்ரம் பிரபு ஒரு பொம்மை ஹெலிகோப்டேரிடம் இருந்து பிந்துவை காப்பாற்ற காதல் பற்றிக்கொள்கிறது. இவர்கள் காதல் பஞ்சாயத்து தலைவரான நிழல்கள் ரவிக்கு தெரிய வர தன் மகள் இறந்ததாக போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஓட்டுகிறார். அதன் பிறகு காதலர்கள் பிரிய ஒருவரை ஒருவர் தேடி கிராமம் கிராமமாக செல்கின்றன. பிளாஷ் பாக் முடிய விக்ரம் பிரபு பிந்துவிடம் காதலனை கண்டு பிடித்து சேர்த்து வைப்பதாக கூறி அழைத்து செல்ல தன் பிளாஷ் பாக்கை அவிழ்த்து விடுகிறார். தோனியின் தீவிர ரசிகரான இந்த விக்ரம் பிரபு தன்னுடன் ஏட்டிக்கு போட்டியாக திரியும் ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணியை விரும்புகிறார். இவர்கள் காதல் காய் கூடும்போது ஒரு திருப்பம் undefined சுவாரிஸ்யம் அற்றதுதான்) வர பின் காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்கிற திரைக்கதையை எவ்வள்வு ஜவ்வாக்கி தர முடியுமோ தந்திருக்கிறார் இயக்குனர்.
விக்ரம் பிரபுவுக்கு ரெட்டை வேடம் இரண்டுக்கும் மருந்துக்கு கூட வித்தியாசம் காட்டாமல் இரட்டை வேட மன்னனான அவர் தாத்தாவுக்கு அநீதி இழைத்திருக்கிறார். ஒரே ஆறுதல் அவர் போடும் அந்த சிலம்பாட்ட சண்டை மிக சிறப்பு. தூக்கத்தில் நடப்பதுபோலவே உலா வருகிறார் பிந்து மாதவி அவர் முகத்தில் அப்படி ஒரு சோர்வு. நிக்கி கல்ராணி கொஞ்சம் இளசுகளை கவர்ச்சியால் கவர்ந்தாலும் ரஜினி ஸ்டைல் செய்ய முயன்று அநியாயத்துக்கு பல்பு வாங்குகிறார் என்பதே உண்மை. சூரியில் தொடங்கி சதீஷ் சிங்கம் புலி சிங்கமுத்து இமான் அண்ணாச்சி முத்துக்காளை என ஒரு காமடி பட்டாளமே வந்து போனாலும் மருந்துக்கு கூட துளியூண்டு சிரிப்பை கூட வர வழைக்க முடியவில்லை. அவ்வளவு குழந்தைத்தனமான கடி ஜோக்ஸ் ஆளுக்கு ஆள் அடித்து மண்டை காய விடுகிறார்கள்.
சி சத்யாவின் இசையில் கிராமிய பாடல்களும் பின்னணி இசையும் வேறு படத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஹிட்டடித்திருக்கும். ஒளிப்பதிவாளர் சரவணன் முடிந்தளவு கிராமத்து திருவிழா காட்சிகளை அழகு படுத்தியிருக்கிறார். கற்பனை பஞ்சம் மிகுந்த இந்த படத்தை தொகுப்பதில் சசிகுமாருக்கு இருந்திருக்க கூடிய வேதனை உணர முடிகிறது. அறிமுக இயக்குனர் எஸ் எஸ் சூர்யாவுக்கு கதை எழுதுவதிலிருந்து நடிப்பு வாங்குவது, தொழில் நுட்பங்களை நேர்த்தியாக இயக்குவது என்று எதிலுமே திறமையிலாதது போன்ற எண்ணமே படம் பார்க்கும்போது வருகிறது. பாவம் தயாரிப்பாளர் டி சிவகுமார்.
மொக்கையான இந்த பக்காவை பார்ப்பது என்பது உங்கள் இஷ்டம் நாங்கள் கூற ஒன்றுமில்லை
- Read in English