முழுக்க முழுக்க வெளிப்புற படப்பிடிப்பில் உருவான முதல் படம்
- IndiaGlitz, [Monday,January 22 2018]
விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்தபடமான 'பக்கா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நிக்கி கல்ராணி மற்றும் பிந்துமாதவி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். மேலும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி S.S.சூர்யா இயக்கும் இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்து வருகிறார். இந்த படம் குறித்து இயக்குனர் S.S.சூர்யா கூறியதாவது: முழு நீள காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.
இன்டீரியல் காட்சிகள் ( சுவற்றிற்குள் ) இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப்பட்ட முதல் படம் இந்த பக்கா.
கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப்குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.
குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று திருவிழாவில் ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம். படம் விரைவில் வெளியாக உள்ளது இவ்வாறு இயக்குனர் எஸ்.எஸ்.சூர்யா தெரிவித்துள்ளார்.