இந்தியா முழுக்க பைக் டிராவல்… எல்லைத் தாண்டி இதயங்களை நெகிழ வைத்த இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
எல்லைகளுக்கு இடையேயான வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு நட்பை வளர்க்க வேண்டும் எனும் நோக்கில் இந்தியா முழுவதும் பைக் டிராவல் செய்த பாகிஸ்தான் இளைஞர் தற்போது அனைவரது நெஞ்சங்களையும் உருக வைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞர் அப்ரார் ஹாசன் யூடியூபராக இருந்துவரும் நிலையில் இவர் நட்பை வளர்க்கும் நோக்கியில் இந்தியா முழுக்க பயணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தனது பயணத்தைத் துவங்கி இருக்கிறார்.
இதையடுத்து டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மூம்பை, கேரளா ஒன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே மாதத்தில் சுற்றிப் பார்த்துள்ளார். மேலும் இந்தியாவில் 7,000 கி.மீ வரையிலும் பயணம் செய்த இவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டதாகவும் அவ்வபோது இளைஞர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாகனங்களை எடுத்துக்கொண்டு தன்னுடனேயே பயணம் செய்ததாகவும அப்ரார் ஹாசன் தெரிவித்துள்ளார்.
நட்பை வளர்க்கும் நோக்கில் அப்ரார் ஹாசன் செய்துள்ள தனது ஒட்டு மொத்த பயணத்தையும கேமராவில் பதிவு செய்திருக்கிறார். ஹெல்மெட்டில் கேமராவை வைத்துக்கொண்டு தேவையான பொருட்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு இந்தியா முழுக்க பாகிஸ்தான் இளைஞர் பயணம் செய்த இந்தத் தகவல் தற்போது பலரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் அப்ரார் ஹாசன் தன்னுடைய பயண வீடியோக்களை தனது வைல்ட் லென்ஸ் எனும் யூடியூப் பகுதியில் பதிவிட்டுள்ள நிலையில் அதுவும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது பயணம் குறித்து பேசிய அப்ரார் ஹாசன் கேரளாவை கடவுளின் சொந்த தேசம் என்றும் இயற்கை அங்கே கொட்டி கிடக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இதைத்தவிர ராஜஸ்தான் குறித்து பேசிய அவர் இந்தியாவின் பெரிய மாநிலம், மன்னர்களின் தேசம் என்றும் கலாச்சாரத்திற்கு சொந்தமானது மட்டுமல்ல, மிக அழகான கோட்டைகள் அரண்மனைகள், கோயில்கள், மசூதிகள் என்று ஆசீர்வதிக்கப்பட்ட பகுதி என்றும் கூறியுள்ளார்.
மேலும் வடக்கில் இருந்து தெற்கு வரை பலதரப்பட்ட நிலப்பரப்பை நான் கண்டேன். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நான் வித்தியாசமான ஒன்றைக் கண்டேன். உள்ளூர் வாசிகள் நட்புடன் பழகினர். செல்லும் இடங்களில் எல்லாம் தங்களது அன்பை காட்டி, உபசரிப்பு செய்தனர் என்று அந்த இளைஞர் கூறியுள்ள தகவல் எல்லை என்பது வெறும் பொய் என்பதை நிரூபித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments