காஷ்மீர் இந்தியாவின் பகுதி என வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் அரசு ஊடகம்!!! கொதித்த அதிபர் இம்ரான்கான்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான ஊடகம் பி.டி.வி வெளியிட்ட ஒரு செய்தி அந்நாட்டு மக்களைக் கொதிப்படைய செய்திருக்கிறது. சச்சரவுக்குப் பெயர் போன இந்த ஊடகம் ஏற்கனவே பல முறை இப்படியான சிக்கலில் மாட்டிக் கொள்ளவும் செய்திருக்கிறது. ஆனால் இந்த முறை செய்த தவறு, பாகிஸ்தான் அதிபரையே கோபமடைய வைத்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையே இருக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் பிரச்சனை காஷ்மீர் பகுதிதான். இருநாடுகளுக்கும் அப்பகுதிக்கு குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பகுதிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தத்தை நீக்கி இந்திய அரசு அது இந்தியாவின் மற்றொரு மாகாணம் என்பதைத் தெளிவு படுத்தி இருந்தது.
ஆனால் இந்தியா, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லாது என்ற கருத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பல முறை எல்லையில் இந்திய இராணுவ வீரர்களை அச்சுறுத்தவும் பாகிஸ்தான் ஆரம்பித்தது. சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபை வரைக்கும் எடுத்துச் சென்ற பாகிஸ்தானால் பெரிய அளவில் விவாதத்தைக் கொண்டு வரமுடியாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடும் சச்சரவுள்ள ஒரு பகுதியை பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீக்கி வீடியோவாக தற்போது அரசு ஊடகம் பி.டி.வி வெயிட்டதைக் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய காஷ்மீர் படத்தை பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீக்கி வீடியோ வெளியிட்டது ஒரு தனியார் நிறுவனம் அல்ல. அது ஒரு அரசுக்குச் சொந்தமான ஊடகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த ஊடகத்தின் இயக்குநர் இது மனித தவறு. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இனிமேல் இப்படி நடக்காது என மன்னிப்பும் கோரியிருக்கிறார். அந்நாட்டின் அதிபர் இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் எனப் பேசியிருக்கிறார். இதற்கு முன்பாகவும் இதுபோன்ற வரைபடங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் அடிக்கடி வலம் வருவது உண்டு. அதிகாரிகள் தடை செய்யப் பட்ட வரைபடமாகவும் அதை அறிவித்து இருக்கின்றனர். இருப்பினும் அடிக்கடி அந்த வரைபடம் வெளியாகி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தான் பிரதமர் சென்ற ஆண்டு சீனாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட போது இதேபோன்ற ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பாகிஸ்தானுக்கு நிதி திரட்டுவதற்காக அதிபர் இம்ரான் கான் ஒரு கம்யூனிச பள்ளியில் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவர் உரை நிகழ்த்தும் இடம் பெய்ஜிங்கில் இருக்கிறது. இது பற்றி நேரடி செய்தி ஒளிபரப்பிய பாகிஸ்தான் அரசு ஊடகம் பி.டி.வி பெய்ஜிங் என்பதற்கு பதிலாக பிச்சை என ஆங்கிலத்தில் எழுதி ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகே அந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பலமுறை சர்ச்சைக்குரிய காரியங்களை செய்து மன்னிப்புக் கோரும் ஒரு ஊடகம்தான் பிடிவி. ஒருநாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடம் அதுவும் அந்நாட்டிற்கு சொந்தமான அரசாங்க தொலைக் காட்சியில் தவறாக ஒளிபரப்பப் பட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? அப்படியான ஒரு நிகழ்வுதான் தற்போது நடந்திருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments