காஷ்மீர் இந்தியாவின் பகுதி என வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் அரசு ஊடகம்!!! கொதித்த அதிபர் இம்ரான்கான்!!!

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

 

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான ஊடகம் பி.டி.வி வெளியிட்ட ஒரு செய்தி அந்நாட்டு மக்களைக் கொதிப்படைய செய்திருக்கிறது. சச்சரவுக்குப் பெயர் போன இந்த ஊடகம் ஏற்கனவே பல முறை இப்படியான சிக்கலில் மாட்டிக் கொள்ளவும் செய்திருக்கிறது. ஆனால் இந்த முறை செய்த தவறு, பாகிஸ்தான் அதிபரையே கோபமடைய வைத்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையே இருக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் பிரச்சனை காஷ்மீர் பகுதிதான். இருநாடுகளுக்கும் அப்பகுதிக்கு குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீர் பகுதிக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்தத்தை நீக்கி இந்திய அரசு அது இந்தியாவின் மற்றொரு மாகாணம் என்பதைத் தெளிவு படுத்தி இருந்தது.

ஆனால் இந்தியா, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லாது என்ற கருத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பல முறை எல்லையில் இந்திய இராணுவ வீரர்களை அச்சுறுத்தவும் பாகிஸ்தான் ஆரம்பித்தது. சீனாவின் உதவியோடு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபை வரைக்கும் எடுத்துச் சென்ற பாகிஸ்தானால் பெரிய அளவில் விவாதத்தைக் கொண்டு வரமுடியாமல் போனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய கடும் சச்சரவுள்ள ஒரு பகுதியை பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீக்கி வீடியோவாக தற்போது அரசு ஊடகம் பி.டி.வி வெயிட்டதைக் குறித்து பாகிஸ்தான் மக்கள் கொதிப்படைந்து இருக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய காஷ்மீர் படத்தை பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து நீக்கி வீடியோ வெளியிட்டது ஒரு தனியார் நிறுவனம் அல்ல. அது ஒரு அரசுக்குச் சொந்தமான ஊடகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த ஊடகத்தின் இயக்குநர் இது மனித தவறு. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இனிமேல் இப்படி நடக்காது என மன்னிப்பும் கோரியிருக்கிறார். அந்நாட்டின் அதிபர் இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் எனப் பேசியிருக்கிறார். இதற்கு முன்பாகவும் இதுபோன்ற வரைபடங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் அடிக்கடி வலம் வருவது உண்டு. அதிகாரிகள் தடை செய்யப் பட்ட வரைபடமாகவும் அதை அறிவித்து இருக்கின்றனர். இருப்பினும் அடிக்கடி அந்த வரைபடம் வெளியாகி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

பாகிஸ்தான் பிரதமர் சென்ற ஆண்டு சீனாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட போது இதேபோன்ற ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்தது. பாகிஸ்தானுக்கு நிதி திரட்டுவதற்காக அதிபர் இம்ரான் கான் ஒரு கம்யூனிச பள்ளியில் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவர் உரை நிகழ்த்தும் இடம் பெய்ஜிங்கில் இருக்கிறது. இது பற்றி நேரடி செய்தி ஒளிபரப்பிய பாகிஸ்தான் அரசு ஊடகம் பி.டி.வி பெய்ஜிங் என்பதற்கு பதிலாக பிச்சை என ஆங்கிலத்தில் எழுதி ஒளிபரப்பியது. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகே அந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பலமுறை சர்ச்சைக்குரிய காரியங்களை செய்து மன்னிப்புக் கோரும் ஒரு ஊடகம்தான் பிடிவி. ஒருநாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடம் அதுவும் அந்நாட்டிற்கு சொந்தமான அரசாங்க தொலைக் காட்சியில் தவறாக ஒளிபரப்பப் பட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? அப்படியான ஒரு நிகழ்வுதான் தற்போது நடந்திருக்கிறது.

More News

உலகத்தையே சொந்தமாக்க நினைத்த மாவீரன் அலெக்சாண்டர் நினைவு தினம் இன்று...

Lord of Asia என்றழைக்கப்படும் கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மாவீரன் அலெக்சாண்டர் உலகில் பெரும் பகுதிகளை வெற்றிக் கொண்ட வரலாற்றை மட்டுமே நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம்

வழுக்கை தலைகளை குறிவைத்துத் தாக்கும் கொரோனா!!! அச்சமூட்டும் ஆய்வுத் தகவல்!!!

கொரோனா வைரஸால் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இறந்து போகின்றனர் என்று இங்கிலாந்து பொதுச் சுகாதார நிறுவனத்தால் நடத்தப் பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.

14வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை: ஐஸ்வர்யா ராய் அதிர்ச்சி

ஐஸ்வர்யா ராய் உட்பட பல முன்னணி பிரபலங்களுக்கு மேனேஜராக இருந்த இளம்பெண் ஒருவர் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

ஆண்கள் போல் வேட்டி-சட்டையில் அசத்தும் அமலாபால்: வைரலாகும் புகைப்படம்

பிரபல நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்த அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர் ஒருவர் பல போராட்டங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு 5 நாட்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில்