ரகசிய குறியீட்டை சுமந்து காஷ்மீருக்கு பறந்து வந்த பாகிஸ்தான் புறா!!! உளவுப் பார்க்க அனுப்பட்டதாகப் பரபரப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி கிராமத்தில் இதுவரை தென்படாத ஒரு வித்தியாசமான புறா ஒன்றை நோற்று கிராம மக்கள் பார்த்தனர். அந்தப் புறா பார்ப்பதற்கு விசித்திரமாக இருப்பதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்தப் புறாவைப் பிடித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, புறாவை காவல் துறையினரும் பாதுகாப்பு படையினரும் சோதனையிட்டு பார்த்ததில் புறா, விசித்திர குறியீட்டு மோதிரத்தை சுமந்து பாகிஸ்தானில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. புறாவின் காலில் மாட்டப்பட்டு இருந்த மோதிரத்தில் சில ரகசிய எண்கள் பொறிக்கப் பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு உளவு பார்க்கவோ அல்லது சில சங்கேத வார்த்தைகளை இங்குள்ளவர்களுக்கு ரகசியமாக தெரிவிக்கவோ அனுப்பப் பட்டு இருக்கலாம் என அச்சத்தை அதிகாரிகள் வெளிப்படுத்தி உள்ளனர். தற்போது புறா காலில் இருக்கும் சங்கேத வார்த்தைகளுக்கான பொருள் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையில் புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மே மாதம் முதலே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் ரகசிய குறியீட்டோடு ஒரு புறா இந்திய பகுதிக்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. இது உளவுக்காக அனுப்பப் பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கதுவா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷைலேந்திர மிஸ்ரா சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout