97 பேரின் உயிரைக் குடித்த பாகிஸ்தான் விமானம் இதனால்தான் வெடித்தது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!!
- IndiaGlitz, [Thursday,June 25 2020]
பாகிஸ்தான் கராச்சி நகரில் கடந்த மாதம் கனத்த ஓசையுடன் அரசுக்குச் சொந்தமான விமானம் ஒன்று வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட கோர விபத்தில் 97 பயணிகள் உயிரிழந்தனர். தற்போது விமான விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை முடிவுக்கு வந்து இருக்கிறது. இந்த விசாரணையில் விமானத்தை இயக்கிய பைலட்டுகள் கவனக் குறைவாக இருந்தார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பிஐஏ பயணிகள் விமானம் கடந்த மாதம் லாகூரில் இருந்து 98 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 107 பேருடன் கராச்சி நகர் நோக்கி பறந்து வந்தது. கராச்சியின் ஜின்னா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் 20க்கும் மேற்பட்ட குடியுருப்பு பகுதிகள் படு சேதமடைந்தன. ஒரு ஏக்கர் அளவிற்கு கறுப்பு புகை மண்டலம் ஏற்பட்ட விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் தெரியாமல் பதற்றம் நிலவியது. சில மணிநேரம் கழித்தே பயணிகள் இறந்த விவரத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. இந்நிலையில் தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப் பட்டு விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.
முதலில் விமானத்தில் லேண்டிங் கியரில் நேர்ந்த கோளாறால் விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. தற்போது எதனால் விபத்து நடந்தது என்பதை பற்றிய முதற்கட்ட விசாரணை தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதில் விமான ஓட்டியும், விமான கட்டுப்பாட்டாளரும் வழக்கமான விதிகளை பின்பற்றாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் விமான ஓடுதளத்தைக் கவனிக்காமல் கொரோனா வைரஸ் குறித்த ஒருவருக்கொருவர் அதிர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் என்று கருப்பு பெட்டி மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான விமானத்தில் எந்தக் குறைபாடுகளும் இல்லை என்றே தொழில்நுட்ப வல்லுநர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
பாகிஸ்தானில் அதிகரித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில்தான் விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட சில தினங்களிலேயே மிகப்பெரிய விமான வெடிப்பு நிகழ்ந்து 97 பேர் உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் நாட்டையே உலுக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.