இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் சாப்பிடலாம்.. வங்கதேச வீரர்களுக்கு பிரபல நடிகையின் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

இன்று நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வங்கதேச அணி தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடலாம் என பிரபல நடிகை ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்தியா ஏற்கனவே விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று வங்கதேச அணியுடன் இந்திய அணி மோத உள்ளது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிடலாம் என பாகிஸ்தான் நடிகை சேகர் ஷின்வாரி என்பவர் தெரிவித்துள்ளார். வங்கதேச அணியியினர்களுடன் அமர்ந்து டாக்காவில் மீன் குழம்பு உணவை சாப்பிட ஏற்பாடு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை இந்திய அணி ஓட ஓட நொறுக்கியதால் இவருக்கு வன்மம் ஏற்பட்டுள்ளது என்றும் நீங்கள் இந்தியா தோல்வி அடைந்தால் தான் விருந்து கொடுப்பீர்கள், நாங்கள் வங்கதேச அணி தோற்றாலும் உங்களுக்கு விருந்து கொடுக்கிறோம் என்றும் பல்வேறு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.