போரே வந்தாலும் பாகிஸ்தான் கலந்து கொள்ளாது.. கடந்த கால தவறுகளை சரிசெய்து கொள்கிறோம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்னைகள் நிலவி வருகின்றன. இரு நாடுகளும் அறிவிக்கும் முடிவுகள் தொடர்பாகவும் பிரச்னைகள் தொடர்பாகவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்தப் பிரச்னை தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், ``இரான் மற்றும் சவுதி அரேபியாவின் நட்புறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும். அமெரிக்கா மற்றும் இரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளது என்பதையும் அதிபர் ட்ரம்ப்பிடம் முன்வைத்துள்ளேன். போர்களில் இருந்து யாரும் வெற்றிபெறப் போவதில்லை. இப்போது, பாகிஸ்தான் போர்களை நடத்தாது. ஆனால், நாடுகளை ஒன்றிணைக்க முயலும்” என்று கூறியுள்ளார்.
இரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கவால் கொல்லப்பட்டதிலிருந்தே உலக நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மற்ற நாட்டுப் பிரச்னைகளில் பாகிஸ்தான் பங்கு பெறாது என்ற தனது தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான நெருக்கடியில் அவர்களுக்கு சமரசம் செய்யும் வாய்ப்பையும் பாகிஸ்தான் புதுப்பித்துக்கொள்கிறது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடனான தொலைபேசி உரையாடலின்போது அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மது குரேஷி இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செனட் சபை கூட்டத்தின்போதும், ``இஸ்லாமாபாத்தின் மண் வேறு எந்த நாட்டுக்கும் எதிராக பயன்படுத்தப்படாது” என்றும் கூறியிருக்கிறார் ஷா மெஹ்மது குரேஷி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout