பாகிஸ்தானில் பஞ்சாயத்து தலைவர் கூறிய பலாத்கார தீர்ப்பு
- IndiaGlitz, [Friday,July 28 2017]
மனித இனம் 21ஆம் நூற்றாண்டை நோக்கி நாகரீக மற்றும் டெக்னலஜியுடன் சென்று கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் மட்டும் இன்னும் பழமைவாதத்தில் ஊறியிருக்கின்றது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முஜாபராபாத் நகரின் பஞ்சாயத்து தலைவர் சொன்ன தீர்ப்பை எடுத்து கொள்ளலாம்
இந்த பகுதியில் உமர் என்ற இளைஞர் அஷ்பக் என்பவரின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இந்த வழக்கை விசாரித்த பஞ்சாயத்து தலைவர் அஷ்பக்கை அழைத்து உமரின் தங்கையை பலாத்காரம் செய்ய தீர்ப்பு கூறினார். அதன்படியே இந்த கொடுமையும் நடந்துவிட்டது.
இந்த சம்பவம் குறித்து உமர் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்த நிலையில் தற்போது பஞ்சாயத்து தலைவர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றம் நிரூபணம் ஆனால் பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கும் மரண தண்டனையும் மற்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் என்பவர் இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பஞ்சாப் ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை செய்த பஞ்சாப் முதல் மந்திரியான ஷெரீப், முதல் சிறுமி பாதிக்கப்பட்ட உடனேயே போலீசார் குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்திருந்தால் 2வது சிறுமிக்கு இந்த கொடுமை நேர்ந்திருக்காது என கூறி அந்த பகுதிக்கு உட்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளையும் பணிநீக்கம் செய்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.