பற்றி எரியும் பாகிஸ்தான்… பிரான்ஸ் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கோரிக்கை… நடந்தது என்ன?
- IndiaGlitz, [Friday,April 16 2021]
நீண்ட காலமாகவே நபிகள் நாயகத்தின் கற்பனை செய்து வரையப்பட்ட உருவப்படம் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நபிகள் நாயகத்தை குறித்து உருவப்படம் அல்லது கேலி சித்திரம் வெளியிட்டால் உடனே அதை வெளியிட்டவர்களின் தலை, நடு ரோட்டில் விழுந்து கிடப்பதும் வாடிக்கையான ஒன்றான மாறிவிட்டது. கடந்த சில மாதங்களில் மட்டும் பிரான்ஸ் நாட்டில் இதுபோன்ற சம்பவம் அதிகரித்து விட்டது.
இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இதுபோன்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டு அதற்கான தண்டனைகளையும் அதிகப் படுத்தினார். மேலும் பிரான்ஸ் நாட்டில் மதவாத பிரிவினையை ஏற்படுத்தும் அமைப்புகளுக்கு தடையும் விதித்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நபிகள் நாயகத்தின் கார்டூன் படத்தை வகுப்பறையில் காட்டிய ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்களில் நபிகள் நாயகத்தின் காட்டூன் படத்தை வெளியிடுவதற்கும் பத்திரிக்கைகளில் அச்சிட்டு வெளியிடுவதற்கும் ஒப்புதல் வழங்கினார். பிரான்ஸ் அதிபர் வழங்கிய இந்த ஒப்புதல் மத நிந்தனையாகத் தற்போது பார்க்கப்படுகிறது. இந்தக் கண்ணோட்டம்தான் தற்போது பாகிஸ்தானில் வன்முறை வெடிக்கவும் ஒரு காரணமாக மாறிவிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீ இலப்பை எனும் அமைப்பு பிரான்ஸ் அதிபரின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை அறிவித்து உள்ளன. இந்தப் போராட்டத்தை அடுத்து பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
நபிகள் நாயகத்தின் காட்டூன் சர்ச்சை தற்போது பிரான்ஸ் மக்களுக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பதைக் குறித்து “பாகிஸ்தானில் வசித்து வரும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும்” என்றும் பாகிஸ்தானில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் நபிகள் நாயகத்தின் காட்டூன் சர்ச்சை தற்போது பிரான்ஸ் மக்களுக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பதைக் குறித்து அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். என்றாலும் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்துச் சமூக வலைத்தளங்களிலும் பிரான்ஸ் மக்களுக்கு எதிரான போராட்டமாகவும் பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாகவும் வெடித்து வருவதை ஊடகங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன.
மேலும் #Frenchleavepakistan எனும் ஹேஷ்டேக் பாகிஸ்தானில் விஷ்வரூபம் எடுத்து இருக்கிறது. இதனால் அந்நாட்டின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளன. கொரோனாவுக்கு நடுவில் பாகிஸ்தானில் ஏற்பட்டு இருக்கும் இந்த வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.