இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானிலும் ரூ.5000 நோட்டு தடை. தீர்மானம் நிறைவேறியது

  • IndiaGlitz, [Tuesday,December 20 2016]

இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இந்த அறிவிப்புக்கு பின்னர் இந்தியா முழுவதிலும் அசாதாரண சூழ்நிலை இருந்து வந்தபோதிலும் பெருமளவு கருப்புப்பணம் முடங்கிவிட்டதாகவும், கள்ள நோட்டு அறவே ஒழிந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவை பின்பற்றி பாகிஸ்தானும் 5000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய வலியுறுத்தி பாகிஸ்தான் செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவை போல உடனடியாக 5000 ரூபாய் நோட்டை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என்றும் உயர் மதிப்பு உள்ள இந்த நோட்டு அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படுவதாகவும், படிப்படியாக மூன்று முதல் ஐந்து வருடங்களில் இந்த நோட்டு முழுவதும் வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செனட் உறுப்பினர் சாய்ஃபுல்லா தெரிவித்துள்ளார்.